News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News March 24, 2026
DCM உதயநிதி காரில் சோதனை

கரூரில் இருந்து திண்டுக்கல் சென்ற DCM உதயநிதி காரை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். திண்டுக்கல்லில் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது வேடசந்தூரை அடுத்த கல்வார்பட்டி சோதனை சாவடியில் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் காவல்துறையினர் உதவியோடு தேர்தல் கண்காணிப்பு குழு தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News March 24, 2026
ராஜ்யசபா சீட்டை குறிவைக்கும் விசிக

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் விசிக உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி இலக்கு குறித்த தீர்மானம் கவனம் பெற்றுள்ளது. அதன்படி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், 2028-ல் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட்டும் விசிக பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விசிகவின் இரட்டை இலக்க சீட் ஆசை நிறைவேறுமா?
News March 24, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 24, பங்குனி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


