News March 12, 2025

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்

image

உடல்நலக்குறைவால் டெல்லி AIIMS ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவரை, PM மோடி உள்ளிட்டோர் ஹாஸ்பிடலுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். வீடு திரும்பிய தன்கரை, சில நாள்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பார்லிமென்ட் அமர்வில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 5, 2026

கத்தார் எரிவாயு உற்பத்தியை நிறுத்துகிறது

image

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவதாக கத்தார் அறிவித்துள்ளது. குறைந்தது ஒரு மாதத்திற்கு சூப்பர் கூல்டு எரிவாயுவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய LNG சப்ளையராக இருப்பதால், இந்த முடிவு நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எரிவாயு விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.

News March 5, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 5, 2026

காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் இவரா?

image

திமுக கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் வேட்பாளர் யார் என்பதை டெல்லி தலைமையே அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் அக்கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர் மணிப்பூர், நாகாலாந்து பொறுப்பாளராக உள்ளார்.

error: Content is protected !!