News September 9, 2025

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

image

கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா கவர்னராக உள்ளார். கோவை தொகுதியில் 1998 முதல் 2004 வரை MP-யாக இருந்த இவர், 2003 – 2006 வரை TN பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், 2004, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் கோவையில் களமிறங்கியவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக நின்று, வெற்றி பெற்றுள்ளார்.

Similar News

News September 10, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு… திமுகவை சாடிய அன்புமணி

image

சமூகநீதியில் அக்கறை இருப்பது போல் திமுக நடிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதை தனது X தள பக்கத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 3 முறை வாய்ப்பு கிடைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News September 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 10, ஆவணி 25 ▶கிழமை: புதன்கிழமை ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

News September 10, 2025

மதராஸிக்கு ரிவ்யூ செய்த சீமான்

image

‘மதராஸி’ படத்தின் சண்டை காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக உள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். ‘மதராஸி’ படம் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு பரிமாணம் எனவும் இது அவருடைய திரைப்பயணத்தில் சிறந்த பதிப்பு என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், ஆக்‌ஷன் படத்திற்குள் ஒரு நல்ல காதலையும் இணைத்து சொன்ன விதம் புதிதாக இருந்தது என்று அவர் கூறினார்.

error: Content is protected !!