News October 25, 2025
தேவர் ஜெயந்தி விழாவில் துணை ஜனாதிபதி?

அக்.30-ல் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.28-ல் தமிழகம் வரும் அவர், கோவையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அக்.29-ல் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் அவர், 30-ம் தேதி மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
தொடரும் ஆம்னி பஸ் கட்டண கொள்ளை: நயினார்

நெல்லையில் இருந்து சென்னை வர ஆம்னி பஸ்ஸில் ஒருவருக்கு ₹7,500 வசூலிக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் விண்ணைத் தொடுவதும், கண் துடைப்புக்காக திமுக அமைச்சர்கள் கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 19, 2026
தீபாவளி விருந்துக்கு ரெடியாகும் ‘அரசன்’?

வெற்றிமாறன்- சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. வடசென்னை யூனிவர்சில் வரும் இந்த படத்தின் சூட்டிங் அடுத்த 3 மாதங்களில் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. இதனால், படத்தை தீபாவளி விருந்தாக நவம்பர் 8-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
News January 19, 2026
பிரபல இயக்குநர் காலமானார்!

உலகளவில் பெரும் வெற்றிபெற்ற ‘தி லயன் கிங்’ (1994) அனிமேஷன் படத்தின் இணை இயக்குநர் ரோஜர் அல்லர்ஸ்(76) உடல்நல குறைவால் காலமானார். ஹாலிவுட்டின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் பியூட்டி & பீஸ்ட் (1991), அலாவுதீன் (1992), ஆலிவர் & கம்பெனி (1998) போன்ற படங்களில் ரோஜர் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு பல ஹாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


