News October 19, 2025
டெல்லியின் பெயரை மாற்ற கோரும் VHP

டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ (Indraprastha) என மாற்ற வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, டெல்லி கலாசார துறை அமைச்சர் கபில் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் தலைநகரை, அதன் பண்டைய வரலாறு & கலாசாரத்துடன் தொடர்புபடுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட், ரயில் நிலையத்தின் பெயரை மாற்றவும் VHP கோரியுள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 20, 2025
BREAKING: அறிவித்தார் பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாரித்த பொருள்களை வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை PM மோடி வலியுறுத்தியுள்ளார். தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய சுதேசி பொருள்களுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து, அதை SM-ல் பகிருமாறு PM அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த தீபாவளி பண்டிகைக்கு 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும், படைப்பாற்றலையும் கொண்டாடுவோம் என்றும் PM தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
தீபாவளிக்கு எந்த திசைகளில் விளக்கு ஏற்றலாம்?

தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து சிவனை வழிபடக் கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நீங்கள் எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம். குறிப்பாக கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் வீட்டில் துன்பம், பீடை அகலும், மேற்கு திசையில் ஏற்றினால் சனி தோஷம், கிரக தோஷம், கடன் தொல்லை ஆகியவை தீரும், வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் திருமணத் தடை நீங்கும் என்று நம்பப்படுகிறது.
News October 20, 2025
ராசி பலன்கள் (20.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.