News September 27, 2025
அனிருத்துடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்

சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே படத்தின் ப்ரோமோ ஒன்று அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனிடையே படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனுடன் அனிருத் கூட்டணி அமைக்கும் முதல் படம் என்பதால் இதுவும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Similar News
News January 7, 2026
₹1,020 கோடி ஊழல் புகார்.. KN நேரு மீது FIR பதிய மனு

அமைச்சர் KN நேரு மீதான ₹1,020 கோடி புகாரில் FIR பதிவு செய்யக்கோரி HC-ல் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. MP இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், நகராட்சி நிர்வாகத் துறையில் நியமனம் மற்றும் ஒப்பந்த விநியோகங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ED அளித்த ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையும், காவல்துறையும் நேரு மீது வழக்குப்பதிய மறுக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 7, 2026
விஜய் ஒரு அரசியல் சக்தி: பிரவீன் சக்ரவர்த்தி

தமிழகத்தில் விஜய் அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் என்று காங்.,ன் <<18785527>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> கூறியுள்ளார். விஜய்யை நடிகராக பார்க்க யாரும் வரவில்லை, அரசியல் தலைவராக பார்க்கத்தான் வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக சீட் என்பது காங்., தொண்டர்களின் கோரிக்கை என்றும் கூறியுள்ளார். இந்த பேச்சு திமுக – காங்., கூட்டணியில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
News January 7, 2026
வீட்டுக்கு ஒரு விஜய்: JCD பிரபாகர்

மக்களை காப்பாற்றக்கூடிய கரம் விஜய்யிடம் இருக்கிறது என JCD பிரபாகர் கூறியுள்ளார். 1972-ல் MGR தொடங்கிய அதிமுக 1973-ல் இடைத்தேர்தலில் வென்றதை மேற்கோள்காட்டிய அவர், அதேபோல தவெகவும் தேர்தலில் வெல்லும் என்றார். மேலும், மக்கள் மனதில் நிரந்தரமாக இடம்பெறக்கூடிய தலைவராக விஜய் இருக்கிறார் என்றும், இன்று வீட்டுக்கு ஒரு விஜய் உருவாகிவிட்டார் எனவும் பேசியுள்ளார். உங்கள் வீட்டில் ஒரு விஜய் இருக்கிறாரா?


