News August 6, 2024
கால்நடை பல்கலை. சேர்க்கை; நாளை தரவரிசை பட்டியல்

கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. (BVSc&AH) இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியலும், BTech- உணவுத் தொழில்நுட்பம்/கோழியின தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்றோர் தரவரிசை பட்டியலும் வெளியாகிறது. www.//adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற தளத்திலும் பட்டியல் வெளியிடப்படும்.
Similar News
News March 26, 2026
29-ம் தேதி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை, மார்ச் 29-ல் விஜய் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 11 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக தரப்பில் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 28-ல் சென்னையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 26, 2026
கடன் தள்ளுபடி.. புதிய தேர்தல் அறிவிப்பு

ராமதாஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல பிரிவினருக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதன்படி, *தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். *மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். *நலிவடைந்த நெசவாளர்கள் கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ராமதாஸின் வாக்குறுதி பற்றி உங்க கருத்து?
News March 26, 2026
CINEMA 360°: மீண்டும் தள்ளிப்போகிறதா LIK?

▶லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் வெளியீடு ஏப்ரல் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ▶ தனுஷின் ‘கர’ படத்தில் பிரித்வி பாண்டியராஜன், முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ▶ஏப். 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘LIK’ படம் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ▶சூரியின் அடுத்த படத்தை அயலான் இயக்குநர் ரவிக்குமார் இயக்க உள்ளார்.


