News January 24, 2025
மூத்த பத்திரிகையாளர் பார்த்தசாரதி காலமானார்

நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான இந்து பார்த்தசாரதி(86) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானர். நீண்ட காலம் ‘தி இந்து’ குழுமத்தில் பணிபுரிந்த இவர் ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராகத் திகழ்ந்ததாகப் பார்த்தசாரதியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக தலைமை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்க வேண்டாம். *கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள், முதியவர்கள், சிறாரை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம். * விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம். *விஜய் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். *சட்டம் – ஒழுங்கை மீறாமல் கண்ணியமாக நடக்க வேண்டும்.
News September 19, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. செப்.22 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே செப்.22, 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE.
News September 19, 2025
ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரோபோ சங்கர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ‘அம்பி’ படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ளார். டப்பிங் கலைஞர், பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர் உள்ளிட்டவற்றின் மூலம் அவருக்கு சுமார் ₹5 – ₹6 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக ‘ஏசியாநெட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரோபோ சங்கரை போலவே அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.