News April 3, 2025
மூத்த பத்திரிகையாளர் க.சிவஞானம் காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், மேடைப் பேச்சாளருமான க.சிவஞானம் உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழில் முன்னணி ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்தவர். சிவஞானம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
Similar News
News April 4, 2025
என்னா தத்துவம்!! சூப்பர் செல்வராகவன் சார்

‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநரான செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது தத்துவங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் “கடவுள் உங்களின் வாழ்க்கையில் இருந்து ஒருவரை நீக்கும்போது அதன் மதிப்பை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் பின்னர் கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி சொல்வீர்கள்.” என தெரிவித்துள்ளார். என்னவா இருக்கும்?
News April 4, 2025
நீட் விவகாரத்தில் உதயநிதி கள்ள மவுனம் : இபிஎஸ்

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்வதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின்பு, 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்ததற்கு என்ன பதில், நீட் தேர்வு இருக்காது என்று கூறிய உதயநிதி கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News April 4, 2025
எம்புரான் பட தயாரிப்பாளர் ஆபீஸில் ED ரெய்டு

வசூல் வேட்டையாடி வரும் மோகன்லாலின் ‘L2:எம்புரான்’ பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனின் சென்னை அலுவலகத்தில் ED சோதனை நடத்தி வருகிறது. கோகுலம் சிட் பண்ட், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த ரெய்டு நடக்கிறது. எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சிகள் இடம்பெற்ற நாடு முழுவதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.