News April 26, 2025

மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் காலமானார்

image

நாட்டின் மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரளாவை சேர்ந்த இவர், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்(ICHR) அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். கேரள வரலாறு, தமிழக வரலாறு, பண்டைய இந்திய வரலாறு, வரலாறு வரைவியல் முறையியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Similar News

News April 27, 2025

உலக ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ரிலையன்ஸ்

image

நிகர மதிப்பின் அடிப்படையில், உலகின் மிகவும் மதிப்புமிக்க 25 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமம் இணைந்துள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, $118 பில்லியன் நிகர மதிப்புடன் ரிலையன்ஸ் 21ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் மைக்ரோசாஃப்ட், அலிபாபா, ஆல்பாபெட் உள்ளிட்ட உலகளாவிய ஜாம்பவான் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும், இதன் சந்தை மூலம் $140 பில்லியனாக உயர்ந்துள்ளது.

News April 27, 2025

₹1,000 கோடியை கொட்டினாலும் அது ஈசி இல்லை: நானி

image

₹1,000 கோடி போட்டு படம் பண்ணினாலும், ‘மெய்யழகன்’ படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது அவ்வளவு எளிதல்ல என நடிகர் நானி தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் ஆடிப்போய் விட்டதாகவும், நடிகர் கார்த்தியிடம் நிறைய பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் பிரேம் குமாரின் இந்த படைப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

காஷ்மீர் இளைஞனின் உயிர் தியாகம்.. ஷிண்டே நிவாரணம்

image

பஹல்காம் தாக்குதலின் போது, சுற்றுலாவாசிகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த குதிரை ஓட்டி ஹுசேன் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஹுசேனின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசிய அவர், உங்களுடைய மகனின் தியாகம் வீண் போகாது என ஆறுதல் கூறினார். தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஹுசேன் கொல்லப்பட்டார்.

error: Content is protected !!