News October 4, 2025
பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் (94) காலமானார். இவர் இந்தி திரையுலகின் லெஜண்ட் இயக்குநரான மறைந்த வி.சாந்தாராமின் மனைவியாவார். ஜனக் ஜனக் பாயல் பாஜே, நவ்ரங், தோ ஆங்கென் பாரா ஹாத், பின்ஜாரா உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் மிக பிரபலமானவை. மிகச்சிறந்த நடிகையான சந்தியா, நடனத்திலும் பெயர் பெற்றவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 21, 2026
தமிழக தேர்தலை நிறுத்தக் கோரி மனு.. காரணம் என்ன?

தமிழக தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் KK ரமேஷ் என்பவர் SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போலீஸாரின் செயல்பாட்டில் திருப்தியில்லை உள்ளிட்ட காரணங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை இம்மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
சமரச பேச்சுவார்த்தை: CPM அலுவலகத்தில் வைகோ

சென்னை தி.நகரில் உள்ள CPM அலுவலகத்திற்கு வைகோ சென்றுள்ளார். தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து CPM வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த வைகோ சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
News March 21, 2026
துரந்தர் 2: இரண்டே நாள்களில் ₹331 கோடி வசூல்

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ‘துரந்தர் 2’ படம் 2 நாள்களில் ₹331 கோடி வசூல் குவித்துள்ளதாக Sacnilk தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ₹267 கோடி வசூலித்துள்ள இப்படம் உலக அளவில் ₹64 கோடி வசூலை ஈட்டியுள்ளது. Preview ஷோவிலேயே ₹51 கோடி வசூலித்து புதிய சாதனையையும் இப்படம் படைத்திருந்தது. விடுமுறை தினமாக உள்ளதால், ஒரே வாரத்தில் ₹600 கோடியை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.


