News September 3, 2025
ரொம்ப Simple-ங்க! தெருநாய்கள் விவாகரத்தில் கமலின் பதில்

தெருநாய்கள் விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து கமல்ஹாசன் சொன்னதை கேளுங்க. இதற்கான தீர்வு ரொம்ப Simple என கூறிய அவர், இப்போ கழுதைய காணோம், யாராவது கேக்குறாங்களா என கேள்வி எழுப்பினார். எல்லா உயிர்களையும் காப்பாத்தணும், எவ்வளவு முடியுமோ காப்பாத்தணும், இதுதான் தன்னோட கருத்து என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த தெரு நாய்கள் விவகாரத்தில் நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News September 5, 2025
இளையராஜாவின் காப்பிரைட் விவகாரம்.. மிஷ்கின் கேள்வி

இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது குறித்து மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாடல்கள் தாய் பால் மாதிரி எனவும், இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் புதிதாக பாடல்களை போடாமல், இளையாராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இசை மேல் இருக்கும் மரியாதைக்காவது இசைஞானியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 5, 2025
ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்த PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயெனுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், அந்த 2 ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு வருமாறு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
News September 5, 2025
மாதம் ₹12,400 உதவித்தொகை.. உடனே அப்ளை பண்ணுங்க

2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை AICTE வெளியிட்டுள்ளது. மாணவர்களின் GATE/CEED ஸ்கோர் அடிப்படையில் மாதந்தோறும் ₹12,400 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிலும் நிறுவனங்களில் ID பெற்று, டிசம்.15க்குள் <