News October 24, 2024

இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சை, திருவள்ளூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த செங்கோட்டையன்

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ECI-யிடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் EPS தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல எனக் கூறியுள்ள அவர், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசமும் கோரியுள்ளார்.

News November 4, 2025

விஜய் கட்சியில் இருந்து விலகினார்

image

தவெகவில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய Ex தலைவர் R.ஜெகன் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் சேர்ந்தனர். கரூர் சம்பவம் நடந்து 1 மாதம் ஆன நிலையில், கட்சியில் அதிரடி மாற்றங்களை விஜய் செய்து வருகிறார். <<18184151>>மகளிரணி<<>>, இளைஞரணி என கட்சியை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அக்கட்சியினர் பாஜகவில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது.

News November 4, 2025

FLASH: ஏற்றம் கண்டு மீண்டும் இறங்கிய பங்குச் சந்தைகள்!

image

இன்று வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள் சற்றுமுன் மீண்டும் சரிவை கண்டுள்ளன. சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து 83,826 புள்ளிகளிலும், நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 25,713 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bharti Airtel, Titan Company, Shriram Finance-ன் பங்குகள் ஏற்றத்தையும், Coal India, Maruti Suzuki, Axis Bank சரிவையும் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!