News May 15, 2024
3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் & கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்புக்கு தலிபான் கண்டனம்

டெல்லி குண்டுவெடிப்புக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்துள்ள அவர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர். இதேபோல் அர்ஜெண்டினா, வங்கதேசம், உக்ரைன், சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகள் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
News November 12, 2025
TVK உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான TVK-வின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளில் இருந்து பட்டதாரிகள், செல்வாக்கு உள்ளவர்கள், களப்பணியாளர்கள் என வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து, TVK நிர்வாகிகள் தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், விஜய் வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
News November 12, 2025
விலை மொத்தம் ₹8,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹173-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக வெள்ளி விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் ₹8,000 உயர்ந்துள்ளது. மீண்டும் வெள்ளி விலை உயர்ந்து வருவதால், நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.


