News December 15, 2024
17ஆம் தேதி மிக கனமழை

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், வரும் 17ஆம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புண்டு.
Similar News
News March 8, 2026
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹10-க்கு விற்பனையான தக்காளி அதிலும் பாதியாக குறைந்து இன்று 1 கிலோ ₹5-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹18, கேரட் ₹20, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹50 என காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது.
News March 8, 2026
எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.
News March 8, 2026
இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!


