News August 14, 2024
தீர்ப்பு வினேஷ் போகத்துக்கு சாதகமாக இருக்கும்: WFI

ஒலிம்பிக்ஸ் வழக்கில் தீர்ப்பு <<13846296>>வினேஷ் <<>>போகத்துக்கு சாதகமாக இருக்கும் என WFI துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் செளதரி தெரிவித்துள்ளார். எடை அதிகரிப்பால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், வெள்ளி பதக்கம் கோரியும் தொடுத்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு, அதிகாரமிக்கவர்கள் தலையிட்டுள்ளனர். போகத்துக்கு பதக்கம் கிடைக்கும் என செளதரி பதிலளித்தார்.
Similar News
News November 25, 2025
Layoff-ல் இணைந்த ஆப்பிள் நிறுவனம்

கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் என பெரும் நிறுவனங்கள் Layoff செய்தபோதும், ஆப்பிள் அந்த முறையை கையாளாமல் இருந்தது. தற்போது, ஆப்பிள் நிறுவனமும் Layoff அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் உடனான ஈடுபாட்டை வலுப்படுத்த, சேல்ஸ் குழுவில் சில மாற்றங்களை செய்வதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணி நீக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 548 ரன்கள் டார்கெட்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 2-வது இன்னிங்ஸில் 260/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கு 548 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டமே எஞ்சி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா?
News November 25, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ₹30,000 கோடியை செலவிட்டுள்ளது. 2023 செப்.15 முதல் தற்போது வரை, பயனாளிகள் தலா ₹26,000 பெற்றுள்ளனர். புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் <<18375564>>தகுதியானோரின் பட்டியலை தயார் செய்யும் பணிகள்<<>> முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட அனைவருக்கும் டிச.15 முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


