News February 23, 2025
கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் மார்ச் 5இல் தீர்ப்பு

சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது மார்ச் 5ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. 2022இல் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தீர்ப்பை மார்ச் 5ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
Similar News
News February 23, 2025
எந்த வழியில் வந்தாலும் ஏற்க மாட்டோம்: CM ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என CM ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என கேட்டுக் கொண்டார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
News February 23, 2025
அது எப்படி இந்திய தேசிய கீதம் வரும்? பாக். கிரிக்கெட் போர்டு

ENGvsAUS போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அந்த அணி ICCக்கு எழுதிய கடிதத்தில், ‘இதனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி இந்தியா பாகிஸ்தானில் விளையாடாத போதும், Playlist இந்தியாவின் தேசிய கீதம் இடம்பெற்றது என கேள்வி எழுப்பியுள்ளது.
News February 23, 2025
ஈழத் தமிழ் ஊடக ஆளுமை காலமானார்

ஈழத் தமிழ் ஊடக ஆளுமையான பிபிசி தமிழோசையின் மூத்த செய்தியாளர் ‘ஆனந்தி அக்கா’ வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார். LTTE தலைவர் பிரபாகரனை முதன் முதலாக நேர்காணல் செய்து ஒலிபரப்பியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனந்தி அக்கா. இலங்கையில் சாவகச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இவர், 1970களிலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். தமிழ் ஈழம் சார்ந்த செய்திகளை 30 ஆண்டுகளாக வழங்கி வந்தவர்.