News August 9, 2024
ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் தீர்ப்பு

வினேஷ் போகத் விவகாரத்தில், ஒலிம்பிக்ஸ் தொடர் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று, சர்வதேச விளையாட்டுத்தீர்ப்பாயம் கூறியுள்ளது. உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்ததால், ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து, அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில், இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி அனபெல் பெனட் இன்று மாலை விசாரிக்கவுள்ளார்.
Similar News
News December 30, 2025
புத்தாண்டில் கார்களின் விலை உயர்கிறது!

புத்தாண்டை முன்னிட்டு கார் வாங்க விரும்புபவர்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஷாக் கொடுத்துள்ளன. மூல பொருட்களின் விலையேற்றம், பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், ஜனவரி முதல் வாரத்தில் கார் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெர்சிடஸ் பென்ஸ், BMW, ஹுண்டாய், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள், மாடல்களை பொறுத்து ₹17,000 – ₹2.68 லட்சம் வரை விலையை உயர்த்த உள்ளதாம்.
News December 30, 2025
2025-ல் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்கள்

தமிழ் சினிமாவில் இந்தாண்டு ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பெரும் ஹிட் அடித்தன. அதில், சில படங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வசூலையும் வாரி குவித்தன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், உங்களுக்கு தெரிந்த படங்கள் வேறு ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 30, 2025
வாழ்க்கையை மேம்படுத்தும் பழக்கங்கள்

வாழ்க்கையை மேம்படுத்துவது ஒரே நாளில் நடந்துவிடாது. தினசரி ஏற்படும் சிறிய, நிலையான மாற்றங்களின் பலனாக வாழ்க்கை மேம்படுகிறது. தொடர்ச்சியாக நாம் கடைபிடிக்கும் பழக்கம், வழக்கமாக மாறும்போது வாழ்க்கையின் அற்புதம் நிகழும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.


