News April 13, 2025
கவர்னர்களுக்கு எதிரான தீர்ப்பு.. மத்திய அரசின் அடுத்த மூவ்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக SC வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மாநில அரசு இயற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்து SC சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வரவேற்ற நிலையில், மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
Similar News
News October 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 23, ஐப்பசி 6 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News October 23, 2025
ஸ்மிருதி இரானி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பில்கேட்ஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் பில்கேட்ஸ் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து அதில் பில்கேட்ஸ் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. ஸ்மிருதிக்கும், பில்கேட்ஸுக்கும் இடையே நடக்கும் வீடியோ கால் உரையாடல் போன்று, இந்த காட்சி அமைய உள்ளதாம்.
News October 23, 2025
விண்ணில் தெரிந்த அற்புதம்… அரிய PHOTO

பிரபஞ்சத்தின் பேரழகை பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டின் தென் தீவுக்கு milky way-வை போட்டோ எடுக்க சென்ற 3 போட்டோகிராபர்களின் கேமராவில் அற்புத காட்சி சிக்கியது. புயலின் போது உருவாகும் red sprites (சிவப்பு கீற்றுகள்) 90 கிமீ வரை உயரும். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் என்பதால் படம்பிடிப்பது கடினம். இந்நிலையில் தான் இவர்கள் கேமராவில் இந்த அரியக் காட்சி சிக்கியது.