News April 29, 2025
சுக்கிரன் பெயர்ச்சி: யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சுக்கிரன் கடந்த ஏப்.26-ம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசிகள்: *மகரம்- தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் வலுப்படும் *கும்பம்: முதலீடுகள் பெருகும். குடும்ப உறவு மேம்படும். அலுவலக அந்தஸ்து உயரும் *மீனம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வணிகத்தில் முன்னேற்றம். ஆரோக்கியம் சிறக்கும்.
Similar News
News September 18, 2025
போலி வாக்காளர்கள்: மீண்டும் குண்டை தூக்கிப்போட்ட ராகுல்

மகாராஷ்டிராவின் ராஜுராவில் போலியாக 6,850 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதில், பாதி பேரின் முகவரியில் ‘Sasti, Sasti’ என இருப்பதாக தெரிவித்த அவர், கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியிலும் 6,018 வாக்காளர்களை நீக்கும்படி போலி விண்ணப்பங்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். ஆலந்த் தொகுதி தற்போது காங்., இடமும், ராஜுரா தொகுதி பாஜகவிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
நாங்க ரெடி.. பாகிஸ்தான் கேப்டன் சவால்!

ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ரசிகர்களுக்கு இதுதொடர்பாக ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி, நாங்க சவாலுக்கும் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். அவர், “கடந்த 4 மாதங்களில் விளையாடியதை போல விளையாடினால், எந்த அணியையும் வெல்ல முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மேட்ச்சில் யார் ஜெயிப்பாங்க?
News September 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு: ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்துக்கு ஒரு கும்பல் திட்டமிட்டு விண்ணப்பித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் வாக்குகள் குறிவைத்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரம் இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.