News August 31, 2025
BREAKING: புதிய டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக(பொறுப்பு) வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறும் நிலையில், நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகையை சேர்ந்த இவர், 1994-ல் IPS ஆக தேர்வானவர். பல மாவட்டங்களில் SP ஆக பணியாற்றியதோடு, முக்கியத்துவம் வாய்ந்த CBCID, நிர்வாக பிரிவிகளில் அரசின் பாராட்டை பெற்றவர்.
Similar News
News September 1, 2025
திமுக தண்டனையிலிருந்து தப்ப முடியாது : அன்புமணி

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மை பணியாளர்களை திமுக அரசு ஏமாற்றுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் பணியாளர்களுக்கு குறைந்தது ₹23,000 வழங்க HC உத்தரவிட்ட நிலையில், எழுதப் படிக்க தெரியாத அவர்களிடம் ₹16,950 ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனம் கையெழுத்து வாங்கியதாக சாடியுள்ளார். உழைப்பு சுரண்டலுக்கு துணை போயுள்ள திமுக தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
விந்து நிறமாற்றம்: ஆண்களே, எச்சரிக்கை!

விழிப்புணர்வு இருந்தால், நோய்களை முன்பே அறியலாம். விந்து திரவத்தின் நிறமாற்றம் ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும்: *வெண்மை(அ) கிரே: இது இயல்பான, ஆரோக்கியமான நிலை. உணவு, நீரேற்றம் பொறுத்து சிறிது மாறுபடலாம். *பச்சை: பாக்டீரியா தொற்று, பால்வினை நோய் அறிகுறி. *மஞ்சள்- சிறுநீர் கலந்த அறிகுறி. துர்நாற்றம், அசவுகரியம். *சிவப்பு: ரத்தம் கலந்த அறிகுறி. இயல்புக்கு மாறான அறிகுறி இருந்தால் உடனே டாக்டரை அணுகவும்.
News September 1, 2025
‘கூலி’ படத்தில் AI இருக்கு : லோகேஷ்

‘கூலி’ படத்தில் AI பயன்படுத்தியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிக்கு டீ-ஏஜிங் செய்ததாகவும், அவருடைய குரலை AI மூலம் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார். தனக்கு AI பயன்படுத்தி பணி செய்வது பிடித்திருப்பதாகவும், அது உதவிகரமாக இருப்பதாகவும் கூறினார். AI பயன்பாடுக்கு தான் எதிரான நபரும் அல்ல, ஆதரவான நபரும் எல்ல என்று லோகேஷ் பேசினார்.