News August 14, 2024
‘GOAT’ கதையை சொன்ன வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘GOAT’ திரைப்படம் செப்.5ல் வெளியாகிறது. படத்தின் கதை குறித்து மெளனம் கலைத்த வெங்கட் பிரபு, கற்பனைக் கதை என்றாலும், நிஜத்திற்கு நெருக்கமாக எடுக்க முயற்சித்துள்ளதாக கூறினார். RAW அமைப்போடு இணைந்து பணியாற்றிய Special Anti Terrorists Squad குரூப் ஒன்று, ஒரு பிரச்னையில் சிக்குகிறது. அதை அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை என்றார். எப்படி இருக்கு கதை?
Similar News
News December 19, 2025
IPL டாப் 4 அணிகள் இதுதான்: அஸ்வின் கணிப்பு

IPL மினி ஏலம் நிறைவடைந்த நிலையில், இந்த சீசனில் டாப் 4-ல் வரப்போகும் அணிகளை அஸ்வின் கணித்துள்ளார். அதில் முதல் இடத்தை 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு அவர் கொடுத்துள்ளார். அடுத்தாக பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அஸ்வினின் டாப் 4-ல் CSK-வுக்கு இடமில்லை. ஏலத்தில் CSK-வின் வீரர்கள் <<18601537>>தேர்வு <<>>குறித்து மறைமுகமாக அஸ்வின் விமர்சித்திருந்ததும் குறிப்பிடதக்கது.
News December 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 554 ▶குறள்:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
▶பொருள்: நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
News December 19, 2025
உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


