News March 17, 2024
வேலூர்: ஆந்திராவில் இருந்து கஞ்சா
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று குடியாத்தம் தாலுகா போலீசார் சைனகுண்டா சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 19, 2024
வேலூர் உழவர் சந்தை இன்றைய விலை பட்டியல்
காய்கறி (கிலோவில்) தக்காளி ரூ.20-22, வெண்டை ரூ.30, கத்தரிக்காய் ரூ.30-35, புடலை ரூ.35, பீர்க்கன் ரூ.40-50, சுரைக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.40-60, கறிவேப்பிலை ரூ.45, கொத்தமல்லி ரூ.35, கேரட் ரூ.58, பீன்ஸ் ரூ.36-40, காலிபிளவர் ரூ.20-25, முள்ளங்கி ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.52-65, சின்ன வெங்காயம் ரூ 60-65, இஞ்சி ரூ.50, தேங்காய் ரூ.15-20-25, அவரை ரூ.50 விற்பனை செய்யப்படுகிறது.
News November 19, 2024
வேலூர் அருகே 5 பேர் கைது
பேரணாம்பட்டு அம்பேத்கர் நகர் மாந்தோப்பில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாஸ் (30), படையப்பா (25), ஆனந்தன் (37), சேட்டு (43), அலிமுதின் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
News November 19, 2024
வேலூரில் ஒரே நாளில் 300 ஆட்டோக்களுக்கு அபராதம்
வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் அண்ணாசாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 25 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு விதிகளை மீறியதாக 300 ஆட்டோக்களுக்கு 1.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.