News May 27, 2024

தமிழகம் முழுவதும் வாகன சோதனை

image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் நடந்த வாகனத் தணிக்கையில் சுமார் ₹1.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை போலீசார் அறிவித்துள்ளனர். இன்று 5,463 வாகனங்களை தணிக்கை செய்ததில் 1,054இல் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தணிக்கை தொடரும் என்பதால், வாகன ஓட்டிகள், ஓட்டுநர் உரிமம், RC புக், இன்சூரன்ஸ் போன்றவற்றை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News March 15, 2026

திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்தது? EPS

image

2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக, நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். ஒரு திட்டத்திற்காக CM ஸ்டாலின் குழு அமைப்பார். ஆனால், அந்த குழு அப்படியே போய்விடும், இவ்வாறு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்தது என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். வரும் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தலாக அமையும் எனவும் சூளுரைத்துள்ளார்.

News March 15, 2026

ஒரே மாதத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்: அமித்ஷா

image

பஞ்சாபில் வாக்கு வங்கியை உயர்த்திவரும் பாஜக, 2027 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற பேரணியில் பேசிய அமித்ஷா, காங்., அகாலி தளம், ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்துள்ள நிலையில் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஒரு மாதத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!