News March 28, 2025
லேட்டா வந்தாலும் வசூலை குவிக்கும் வீர தீர சூரன் 2!

பெரும் பிரச்னையைத் தொடர்ந்து விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படம் நேற்று மாலை முதல் திரையிடப்பட்டது. தில், தூள், சாமி போன்ற ஆக்ஷன் ரோலில் சியான் மாஸ் காட்டியதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். தாமதமாக வெளியாகினாலும், முதல் நாளில் ₹3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தொடர் விடுமுறை வருவதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கிறார்கள். நீங்க படம் பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?
Similar News
News March 31, 2025
வங்கிகள், வருமான வரித்துறை ஆபிஸ்கள் இன்று இயங்கும்

ரம்ஜான் தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. 2024 – 25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என RBI விளக்கம் அளித்துள்ளது. இதேபோல் வருமானவரித்துறை தொடர்பான பணிகள் இடையூறின்றி செயல்பட நாடு முழுவதும் வருமான வரித்துறை (Income Tax) அலுவலகங்களும் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2025
LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

4 நாள்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் சுமார் 4,000 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கட்டுப்பாடுகளைத் தளர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
News March 31, 2025
உலகம் போற்றும் பிரதமரை விமர்சிப்பதா? சரத்குமார்

உலகம் போற்றும் பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, விஜய் கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் பிரதமரை சர்வதேச தலைவர்கள் வியந்து பாராட்டி வருவதாகவும், எதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது என்பதன் உண்மை காரணத்தை அறிந்து விஜய் பேசியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.