News December 19, 2025
VB-GRAM-G: தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள்? 1/2

*புதிய ஊரக வேலைத்திட்டத்தில் 100 நாள்கள் வேலை 125 நாள்களாக அதிகரிக்க உள்ள நிலையில், சம்பளம், கட்டுமான பொருள்கள் மொத்த செலவில் மத்திய அரசு 60%, மாநில அரசு 40% பங்களிக்க வேண்டும். இதனால் *தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் (ஆண்டுக்கு சுமார் ₹4,600 கோடி வரை ஒதுக்க வேண்டி வரும்) *இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க நேரிடும்.
Similar News
News December 24, 2025
தமிழ்நாடு அரசு VOLVO பஸ்களின் கட்டணம் இதுதான்!

CM ஸ்டாலின் தொடங்கி வைத்த நவீன <<18656900>>VOLVO <<>>குளிர்சாதன சொகுசுப் பஸ்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. சென்னை – மதுரை வழித்தடத்திற்கு ₹790, சென்னை – நெல்லைக்கு ₹1080, சென்னை – சேலத்திற்கு ₹575, கோவை – சென்னைக்கு ₹880, சென்னை – திருப்பூருக்கு 800, திருச்சி – சென்னைக்கு ₹565 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்க கிலோ மீட்டருக்கு ₹1.70 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் தற்கொலை.. மனைவி கண்ணீர்

ஹாலிவுட் நடிகர் <<18637371>>ஜேம்ஸ் ரன்சோன்<<>>(46) தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி ஜேமி உருக்கமாக SM-ல் பதிவிட்டுள்ளார். ‘உன்னை காதலிப்பதாக முன்பு 1,000 முறை சொல்லியிருப்பேன். மீண்டும் உன்னை காதலிப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ‘IT: சாப்டர் 2’ படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான ஜேம்ஸ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
News December 24, 2025
DCM ஆக தொடர்வதில் மகிழ்ச்சி: டிகே சிவகுமார்

<<18636138>>கர்நாடக CM பதவி<<>> மாற்றம் குறித்த சலசலப்பு இன்னும் ஓயாத நிலையில், DCM டிகே சிவகுமார் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், தான் DCM ஆக தொடர்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஒரு கட்சி தொண்டனாக இருப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தார். எந்த நேரத்திலும் காங்., தலைமை எந்த முடிவையும் எடுக்கும் என்று கூறிய அவர், அந்த முடிவுக்கு கட்டுப்படுவேன் எனவும் குறிப்பிட்டார்.


