News January 23, 2026

‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

image

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தில், *2005-ல் கொண்டுவரப்பட்ட MGNREGA திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடர வேண்டும். *மாநில அரசு 40% நிதி பங்கீட்டை நீக்க வேண்டும். *இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ₹2,113 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

Similar News

News April 9, 2026

தமிழ் நடிகை தற்கொலை.. பரபரப்பு தகவல்

image

சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. FIR-ல் உள்ள அவரது பெயருக்கும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் முரண்பாடு உள்ளதாம். இச்சிக்கலை களைய, சுபாஷினியின் குடும்பத்தார் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 9, 2026

3 மாநில தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

image

நண்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 49.70% மற்றும் அசாமில் 59.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வாக்குச்சாவடிகளில் போதுமான பந்தல் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2026

விஜய்க்கு அரசியலே தெரியாது: கலாநிதி வீராசாமி

image

திமுகவை இழிவாக பேசுவது மட்டுமே அரசியல் என்று விஜய் நினைப்பதாக கலாநிதி வீராசாமி MP தெரிவித்துள்ளார். அரசியலை பற்றி விஜய்க்கு எதுவும் தெரியாது என்றும், அவருக்கு பூஜ்ஜியம் அனுபவம் மட்டுமே உள்ளதாகவும் கலாநிதி வீராசாமி விமர்சித்துள்ளார். பாஜகவை கொள்கை எதிரி என விஜய் குறிப்பிட்டாலும், அக்கட்சிக்கு எதிராக ஒற்றை வார்த்தை பேசுவதற்கு கூட அவருக்கு தைரியம் கிடையாது என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!