News March 2, 2025

மேட்சை மாற்றிய வருணின் மேஜிக் பந்து

image

NZக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றி, மேட்சை IND பக்கம் திருப்பியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே NZ வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், வருண் தனது மேஜிக் பந்தால் பிலிப்ஸ், மிச்சல் ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால், 39 ஓவரில் 162/6 ரன்கள் எடுத்துள்ள நியூசி., வெற்றிபெற இன்னும் 66 பந்துகளில் 88 ரன்கள் எடுக்க வேண்டும்.

Similar News

News March 12, 2026

தஞ்சை: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT

News March 12, 2026

ராமதாஸ் வழக்கிற்கு இடைக்கால தடை

image

கட்சி(பாமக) உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து HC-ல் பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2026

Induction Stove-வுக்கு அதிகரித்த டிமாண்ட்.. No Stock!

image

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை அடுத்து, இண்டக்‌ஷன் ஸ்டவ் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிளிங்கிட், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 2-3 நாட்களாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பிளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பல தளங்களில் இப்போது இண்டக்‌ஷன் ஸ்டவ் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் இதே நிலைதான் உள்ளதாம்.

error: Content is protected !!