News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News September 16, 2025
நெல்லை வழியாக சென்னைக்கு ஏசி ரயில் அறிவிப்பு

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி வழியாக சென்னை சென்ட்ரல் செங்கோட்டை இடையே ஏசி பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் (06121/06122) இயக்கப்பட உள்ளன. அனைத்து பெட்டிகளும் ஏசி பெட்டியாக இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
கவின் கொலை வழக்கு; எஸ்ஐ ஜாமின் மனு இன்று விசாரணை

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் கவின் கடந்த ஜூலை மாதம் கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமின் மனு கோரி உதவி ஆய்வாளர் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று மற்றும் இன்று அந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
News September 16, 2025
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நெல்லை காவல்துறை அறிவுரை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆட்டோக்களின் அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி போக்குவரத்து காவலர்கள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். குறிப்பிட்ட அளவிலேயே ஆட்டோகளில் குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுரை.