News March 18, 2024
வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.