News April 13, 2025
‘வனஜீவி’ ராமைய்யா உடல் அடக்கம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த, <<16071420>>மறைந்த ‘வனஜீவி’ ராமைய்யாவின்<<>> உடல் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த இவர் 1 கோடி மரங்களை நட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டார். பிரதமர் மோடியும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியபின், அவர் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மரம் நடப்பட்டது. RIP
Similar News
News October 16, 2025
BREAKING: ரஜினியுடன் இரவில் திடீர் சந்திப்பு

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் OPS நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் இருந்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே எனவும் ரஜினிக்கு OPS தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அண்மையில் OPS வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவும் பானம்

ஒரு பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் மிளகு, இடித்த இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள். இஞ்சி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்த பிறகு, அதில் மஞ்சள் பொடியை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கொஞ்சம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பிறகு அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளுங்கள்.
நன்கு கலந்து சூடாக அப்படியே குடித்துப் பாருங்கள். உங்கள் ஒற்றைத் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
News October 16, 2025
₹12,400 கோடி சொத்து இருந்தும் இது தேவையா?

₹12,400 கோடி சொத்து இருந்தும் பான் மசாலா விளம்பரங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று, நடிகர் ஷாருக்கானுக்கு பிரபல யூடியூபர் துருவ் ரதீ கேள்வி எழுப்பியுள்ளார். பான் மசாலா விளம்பரத்திற்காக ஷாருக் ₹100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ₹12,400 கோடி சொத்து இருக்கும்போது, கூடுதலாக ₹100 கோடி தேவையா எனவும், உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா எனவும் யூடியூபர் துருவ் கேள்வி எழுப்பியுள்ளார்.