News August 6, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். மனதை அடக்க நினைத்தால் அடங்காது, அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
Similar News
News August 6, 2025
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்கா: EPS

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது திருப்பூர் சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் மத, சாதி சண்டைகள் இன்றி தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது என்றும், ரவுடிகள் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றதாகவும் கூறினார். ஆனால் தற்போது காவல்துறை அதிகாரியே வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார் என்று தெரிவித்தார்.
News August 6, 2025
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
News August 6, 2025
UPI பயன்படுத்த கட்டணம்? RBI கவர்னர் அறிவிப்பு

Gpay, Phonepe போன்ற UPI சேவைகளுக்கு விரைவில் கட்டண அறிவிப்பு வெளியாகலாம். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, UPI சேவையை நீண்டகாலத்துக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. யாராவது அந்த சுமையை ஏற்றுதான் ஆகவேண்டும் என்றார். ஏற்கெனவே <<17195322>>தான் கூறியதை<<>> அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதால், விரைவில் கட்டண விதிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.