News February 14, 2025

காதல் பேசும் காதலர் தின உடைகள்

image

காதலர் தினத்தன்று (பிப்.14) அணியும் வண்ண உடைகளுக்கு பல அர்த்தம் காெள்ளப்படுகிறது. அதை இங்கு பார்க்கலாம். 1) வெள்ளை: காதல் உறவில் அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம் 2) ஆரஞ்சு: யாரையோ மனதில் நினைத்திருக்கிறார்கள் என அர்த்தம் 3) பிங்க்: யாருடைய ப்ரபோசலையோ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். நீங்கள் என்ன நிற உடை அணிய போகிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News February 19, 2025

CM பதவியை ராஜினாமா செய்யத் தயார்: மம்தா

image

வங்கதேச நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால், மேற்குவங்க மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். தன்னை எதிர்கொள்ள பாஜகவினருக்கு தைரியம் இல்லை என விமர்சித்த அவர், அதனால் தான் முஸ்லிம் லீக் அமைப்பில் நான் உறுப்பினராக இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக சாடினார்.

News February 19, 2025

பரங்கிக்காயில் பல்லாயிரம் மருத்துவ குணங்கள்!

image

*பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகமுள்ளதால் கண்களுக்கு நல்லது.
*ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை பரங்கிச்சாறு போக்கும்.
*பரங்கிச்சாறோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பரங்கிக்காய் போக்கும்.
*ரத்த சோகையை குணப்படுத்தும் பண்பு பரங்கிக்காயிடம் உண்டு.

News February 19, 2025

மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

image

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள சூழலில், மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இந்த கையெழுத்து இயக்கம் மூலம், குழந்தைகளுக்கு விருப்பமான 3ஆவது மொழி எது என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக NEPஐ செயல்படுத்தாமல், அந்த நிதியை தமிழகத்திற்கு தர முடியாது என தர்மேந்திர பிரதான் பேசியிருந்தார்.

error: Content is protected !!