News August 4, 2024
பட்டத்தை வைரமுத்து மறுக்க வேண்டும்: சுப.வீ

கவிஞர் வைரமுத்துவுக்கு மதுரை தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கவுள்ளது. அதனை அவர் மறுப்பதே பெருமை என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘முத்தமிழ் அறிஞர்’ என்று அழைக்கும்போது, வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டம் பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 17, 2026
டெல்லி செல்லும்முன் பற்ற வைத்த மாணிக்கம் தாகூர்

டெல்லி செல்வதற்கு முன் மாணிக்கம் தாகூர் போட்ட பதிவு தான், தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக். டெல்லிக்கு செல்வது எனக்காக அல்ல!, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், காங்., உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்துவிடக் கூடாது என்பதை தலைவர்களிடம் வலியுறுத்தவும் டெல்லி சொல்லவிருக்கிறேன் என பதிவிட்டு புதிய நெருப்பை பற்றவைத்துள்ளார்.
News January 17, 2026
மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை: அன்புமணி

TN-ல் பொங்கல், போகி நாள்களில், டாஸ்மாக் வாயிலாக <<18876139>>₹518 கோடிக்கு<<>> மது விற்பனையானது. இதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, மக்கள் நலனுக்காக துரும்பை கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும் குடிகாரர்களாக்கி, மது வணிகத்தை பெருக்குவதில் தான் சாதனை படைத்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது சாதனை அல்ல, வேதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
News January 17, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


