News March 18, 2024
வாரிசுக்கு இடம் ஒதுக்கிய வைகோ

மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்காக இரு தொகுதிகள் கேட்டிருந்தது மதிமுக. ஆனால், திமுக ஒரு தொகுதி தான் தரமுடியுமெனக் கூறியபோது, துரைக்காக அதற்கும் மதிமுக சம்மதித்தது. வாரிசு அரசியலை எதிர்த்த கலகக்காரரான வைகோ, இன்று தனது வாரிசுக்கு சீட்டு வாங்கியது காலத்தின் கோலம் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Similar News
News November 8, 2025
2026 தேர்தலில் SIR தான் ஹீரோ: கடம்பூர் ராஜூ

2026 தேர்தலில் SIR தான் ஹீரோ ஆக இருக்கும் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 12,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், அதனால் தான் SIR என்றாலே திமுகவுக்கு பயம், நடுக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார். SIR சிறப்பாக நடைபெற்று தகுதியானவர்கள் வாக்களிக்கும் போதும், கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று EPS முதல்வராக வருவார் என்றும், கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
News November 8, 2025
நவம்பர் 8: வரலாற்றில் இன்று

*1680–தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்தநாள். *1910–தவில் கலைஞர் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை பிறந்தநாள். *1927–மூத்த அரசியல்வாதி அத்வானி பிறந்தநாள் *1947–பாடகி உஷா உதுப் பிறந்தநாள். *1966–அரசியல்வாதி சீமான் பிறந்தநாள். *1987–எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமி மறைந்த நாள். *1989–நடிகர் அசோக் செல்வன் பிறந்தநாள். *2006–அரசியல்வாதி கா.காளிமுத்து மறைந்த நாள். *2016–PM மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த நாள்.
News November 8, 2025
இந்திய அணியில் சா பூ திரி விளையாட்டு?

ஒவ்வொரு போட்டிக்கும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தேவையின்றி மாற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 1, 3-வது டி20-ல் சூர்யகுமார் ஒன் டவுன் வீரராக களமிறங்க, அதே வரிசையில் 2-வது டி20-ல் சாம்ஸன், 4-வது டி20-ல் துபே களமிறங்கினர். இதில் சஞ்சு 2 ரன்களுக்கு அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்பட்டார். இப்படி செய்வது ஃபார்மில் இருக்கும் வீரர்களை பாதிக்கும் என்று ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.


