News May 26, 2024
தவறி கீழே விழுந்தார் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைகோவுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் சிகிச்சைக்காக அவர் சென்னை விரைந்துள்ளார் என்றும் துரை வைகோ கூறியுள்ளார். நாகர்கோவில் மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் வைகோ பங்கேற்கவிருந்த நிலையில் துரை வைகோ பங்கேற்று இத்தகவலை கூறினார்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு திருப்பதி கோயில் பற்றி தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் “தென்திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 420 அடி உயரத்தில் உள்ளது. திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
News November 24, 2025
இது தெரியாமல் Loan வாங்காதீங்க..

சொந்த வீடு கட்ட வங்கியில் Home Loan வாங்க திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு சாதகமாக, 2025-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50%லிருந்து 5.50%-ஆக குறைத்ததால், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. அதன்படி, Home Loan-க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
News November 24, 2025
இனி 2.30 மணி நேரத்தில் சென்னை TO ஹைதராபாத்!

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல 12 மணி நேரமாவதால், நேர விரயம், பயண களைப்பு என தவிக்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி 2.30 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம் என்ற நம்ப முடிகிறதா? ஆம், சென்னை – ஹைதராபாத் இடையேயான 778 கி.மீ., புல்லட் ரயில் திட்டத்தின் அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு TN அரசு ஒப்புதல் வழங்கினால், இம்மாத இறுதிக்குள் DPR இறுதி செய்யப்படும்.


