News April 29, 2025
வைபவ் சூர்யவன்ஷியின் வியக்க வைக்கும் சாதனைகள்!

14 வயதிலேயே சதமடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் மேலும் பல அசைக்க முடியாத சாதனைகளையும் படைத்துள்ளார். அறிமுகமாகி குறைந்த போட்டிகளிலேயே (3) சதம் விளாசிய இந்திய வீரர் அவர்தான். நேற்றைய போட்டியில் அவர் அடித்த 101 ரன்களில் 93% சிக்சர், பவுண்டரி மூலம் குவித்துள்ளார். இது ஐபிஎல் தொடரில் எவரும் செய்யாத சாதனை. அதிவேக சதமடித்த இந்திய வீரரும் வைபவ் சூர்யவன்ஷிதான். 14 வயசுல இவ்வளவு சாதனைகளா..!
Similar News
News November 11, 2025
Bussiness Roundup: வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடி

*வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. *கிரெடிட் கார்டு கடன் தொகை ₹2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *இந்தியாவில் நடப்பாண்டில் வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்ப்பு. *அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து ₹88.71 ஆனது. *ஒடிஷா, ம.பி., ஆந்திராவில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு.
News November 11, 2025
3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
News November 11, 2025
₹9,169 கோடி வரி ஏய்ப்பு செய்த சிறிய கட்சிகள்

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் ₹9,169 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. இதை சாதகமாக பயன்படுத்திய சிலர், அக்கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி, ITR தாக்கல் செய்துள்ளனர். நன்கொடை மிக அதிகமாக இருந்ததால், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சந்தேகம் அடைந்து, நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.


