News May 31, 2024
கண்ணீர் விட்ட வடிவேலு

அண்மையில், சன் தொலைக்காட்சியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். அதில் வடிவேலு கண்கலங்கி பகிர்ந்த விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு வாழ்க்கையில் சோறு போட்ட தெய்வம் என்றால், அது ராஜ்கிரண் தான் என்று நினைவுகூர்ந்தார். சினிமாவிற்குள் தான் வருவதற்கு அவர் தான் காரணம் என்று கண்ணீர் மல்க பேசினார்.
Similar News
News November 28, 2025
விருதுநகரில் பொது மேலாளர் ஆய்வு

விருதுநகர் ரயில்வே நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தில் ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. தோரண நுழைவாயில் சுற்றுச்சுவர் கூரையுடன் கூடிய டூவிலர் கார்கள் காப்பகம், முகப்பு மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் நடை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம் சிங் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
News November 28, 2025
நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


