News March 25, 2024
அன்று வடிவேலு, இன்று கமல்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 2011 தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் இப்போது நடப்பது மக்களவைத் தேர்தல் என்பதால், கமல் பிரசாரம் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என பொருத்திருந்து பார்ப்போம்.
Similar News
News February 20, 2026
பொது மயானத்தை மறுப்பதும் தீண்டாமையே: சென்னை HC

பொது மயானத்தை பட்டியலினத்தவர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமே என சென்னை HC தெரிவித்துள்ளது. ஈரோடு கருமாண்டி செல்லிப்பாளையத்தில் வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரி கிராமத்தினர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இக்கருத்தை சென்னை HC கூறியுள்ளது. கண்ணியத்துடன் வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது போல, இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்யவும் உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
News February 20, 2026
அமைச்சர் பதவியிலிருந்து நேருவை தூக்குங்க: விஜய்

அமைச்சர் பதவியில் இருந்து கே.என்.நேருவை நீக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நகராட்சி துறையில் நடைபெற்றுள்ள ₹1,020 கோடி ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஐகோர்ட் உறுதிசெய்தும், நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு இது பெரும் அவமானம் என சாடியுள்ளார். மேலும், ஊழல் மலிந்த இந்த அரசை 2026 தேர்தலில் மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
உங்களுக்கு PM KISAN பணம் வருமா?.. செக் பண்ணுங்க!

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) அடுத்த வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் மத்திய அரசு விடுவிக்கும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை ஆன்லைனில் அறியலாம். pmkisan.gov.in இணையதளம் சென்று, Beneficiary List ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன்பின், விவரங்களை உள்ளிட்டு Get Report பட்டனை கிளிக் செய்தால் பயனாளிகளின் பட்டியல் வெளியாகும். SHARE


