News March 12, 2025
மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக US இருதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
Similar News
News July 10, 2025
கோவை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய நபர் கைது

கோவையில் 1998-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாதிக் (எ) டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், தீவிர தேடுதலுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 1998, பிப்ரவரி 14-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்.
News July 10, 2025
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஃப்ரீடம்’. இலங்கை சிறையில் இருந்து தப்பிக்கும் தமிழர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், பொருளாதார காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. நாளை வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிற்பகலில் வெளியாகும்.
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.