News April 24, 2025
ரேஷன் கடைகளில் காலியிடம் நிரப்பப்படும்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் கட்டுநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கிராமங்களில் 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து பொருள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
Similar News
News April 24, 2025
PAK நடிகர் பட ரிலீஸுக்கு தடை!

பாக். நடிகர் ஃபவாத் கான் – வாணி கபூர் நடித்துள்ள ‘அபிர் குலால்’ படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. வரும் மே 9-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாலிவுட் படங்களில் பாக். நடிகர்களை நடிக்க வைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
News April 24, 2025
மயோனைஸுக்கு பதில் எதை பயன்படுத்தலாம்?

பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என மயோனைஸ் விரும்பிகள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வீட்டிலேயே தயாரித்த அயோலி (Aioli), கிரீக் யோகர்ட், முந்திரி கிரீம், அவகேடோ, புளிப்பு கிரீம் (Sour Cream), டோஃபு (Tofu), ஹும்மஸ் (Hummus) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
News April 24, 2025
சிம்லா ஒப்பந்தம் ரத்து.. பாக். அறிவிப்பு

இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இந்தியா அதிரடி ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோய், சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியா உடனான அனைத்துவிதமான வர்த்தகத்தையும் நிறுத்துவதாக முடிவெடுத்துள்ள பாகிஸ்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டுள்ளது.