News October 27, 2024
விஜய்யை விடாத ‘வி’ சென்டிமென்ட்

பெயரிலேயே வி வைத்திருக்கும் விஜய் திரையில் அறிமுகமானது வெற்றி படத்தில். அடுத்து அரசியலில் கால்பதிக்க முடிவெடுத்து, தொடங்கிய கட்சிப் பெயரிலும் வி உள்ளது. அதேபோல, முதல் மாநாடு நடைபெறும் இடம் வி சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம். இதிலும் 3 வி உள்ளது. எழுதிய கடிதத்திலும் வி சாலை என்னும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்கிறார். விஜய்க்கு அப்படி என்ன வி சென்டிமென்ட் இருக்கிறதோ?
Similar News
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.
News July 9, 2025
காதலியை ஐபிஎஸ் ஆக்க இப்படி ஒரு வழியா?

வடமாநிலங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கங்கை நீர் காவடி சுமக்கும் வழக்கம் உண்டு. அப்படி ஹரித்துவாரில், காவடியில் இருபுறமும் கங்கை நீரை சுமந்துகொண்டு வந்த இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா? அவரின் காதலி இப்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும்வரை கங்கை காவடி தூக்குவதாக வேண்டுதலாம். ஐபிஎஸ் ஆனபின் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாராம்.
News July 9, 2025
20 மாவட்டங்களில் இரவு மழை: IMD

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமாம்.