News March 16, 2025
உத்தரகாண்ட் நிதியமைச்சர் ராஜினாமா

உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் பட்ஜெட் தாக்கலின்போது, உத்தரகாண்ட் ஒன்றும் மலைப்பகுதி மக்களுக்கானதல்ல என அவர் பேசியிருந்தார். இதையடுத்து உத்தரகாண்ட் பாஜக அரசு, மலைப்பகுதி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனால் சர்ச்சை உருவான நிலையில், பதவியை பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார்.
Similar News
News July 11, 2025
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை தற்கொலைக்கு முயற்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகிறது. இதில் பிராந்திய மொழி நிகழ்ச்சியில் காதல் தோல்வி காரணமாக டிவி நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை தயாரிப்பு குழு கடைசி நேரத்தில் காப்பாற்றி விட்டதாகவும் இந்தி நிகழ்ச்சி தயாரிப்பு குழு நிர்வாகி கூறியுள்ளார். ஆனால் நடிகையின் பெயரை வெளியிடவில்லை.
News July 11, 2025
பெண்ணின் வாக்காளர் அட்டையில் நிதிஷ் புகைப்படம்

பீகாரில் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் CM நிதிஷ் குமாரின் புகைப்படம் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்தில் முகவரி மாற்றத்திற்கு மாதேபுராவை சேர்ந்த அபிலசா குமாரி விண்ணப்பித்துள்ளார். அதன்படி, முகவரி மாற்றப்பட்ட நிலையில், அபிலசாவுக்கு பதிலாக நிதிஷின் படம் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News July 11, 2025
ராசி பலன்கள் (11.07.2025)

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – ஓய்வு ➤ மிதுனம் – ஜெயம் ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – நன்மை ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – ஜெயம் ➤ தனுசு – மறதி ➤ மகரம் – தோல்வி ➤ கும்பம் – அசதி ➤ மீனம் – வரவு.