News March 3, 2025
உத்தரகாண்ட் பனிச்சரிவு பலி எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சமோலியில் அண்மையில் நேரிட்ட பனிச்சரிவில் 55 எல்லைச் சாலை அமைப்பு ஊழியர்கள் சிக்கி புதையுண்டனர். அவர்களில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 47 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2026
காங்கிரசை அடகுவைத்த அரசியல் வியாபாரி: ராஜ்மோகன்

‘இனம் இனத்தோடு சேரலாம்’ என விஜய்யை விமர்சனம் செய்த செல்வப்பெருந்தகைக்கு தவெகவின் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். காங்., பேரியக்கத்தை கூட்டணி என்ற பெயரில் ஒரு குடும்பத்திடம் அடகு வைத்துவிட்ட அரசியல் வியாபாரி, அடுத்தவர்களை ஆதாரமின்றி விமர்சனம் செய்வதா என சாடிய அவர், காமராசரைத் தந்த கட்சியை ஏலத்தில் விட்டு, தன் சொந்தக் கல்லாப் பெட்டியை நிரப்பியவர்கள் யாரென்று ஊர் அறியும் எனவும் விமர்சித்தார்.
News March 15, 2026
தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான தேதி வரும் செவ்வாய்கிழமை (மார்ச் 17) அறிவிக்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணி, பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்தது? EPS

2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக, நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். ஒரு திட்டத்திற்காக CM ஸ்டாலின் குழு அமைப்பார். ஆனால், அந்த குழு அப்படியே போய்விடும், இவ்வாறு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்தது என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். வரும் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தலாக அமையும் எனவும் சூளுரைத்துள்ளார்.


