News June 28, 2024
உத்தரபிரதேசம் 2ஆவது இடம்: யோகி

கடந்த 2017ல் இந்தியாவில் 6ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக இருந்த உத்தரபிரதேசம், தற்போது 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், தொழில் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 3, 2025
இந்துமத வெறுப்பால் திமுக அரசு அழியும்: நயினார்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டு தனது இந்து மதவெறுப்பை திமுக அரசு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக நயினார் சாடியுள்ளார். மதச்சார்பின்மை வேடமிட்டு இந்து மதத்தை குறிவைத்துத் தாக்கும் திமுக அரசின் மேல்முறையீட்டு முறியடிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கியெறிப்படும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.
News December 3, 2025
மீண்டும் அஜித் Vs விஜய் மோதல்

நீண்ட நாள்களுக்கு பிறகு தியேட்டர்களில் அஜித், விஜய் படங்கள் மோதுகின்றன. சில நாள்களுக்கு முன்பு ரீ-ரிலீசான அஜித்தின் அட்டகாசத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், விஜய்யின் காவலன் டிச.5-ம் தேதி ரீ-ரிலீசாகிறது. இதையடுத்து இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும், பாக்ஸ் ஆபிஸில் தங்களது பலத்தை காட்ட ஆவலோடு உள்ளனர். ஹிட் அடிக்க போவது யார்?
News December 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 3, கார்த்திகை 17 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


