News April 1, 2025

உசைன் போல்ட் தந்தை வெல்லெஸ்லி போல்ட் மரணம்

image

பிரபல தடகள ஜாம்பவான் உசைன் போல்டின் தந்தை வெல்லெஸ்லி போல்ட்(68) காலமானார். உடல்நலக்குறைவால் ஜமைக்காவின் ஷெர்வுட் கன்டென்ட் பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனான உசைன் போல்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த வெல்லெஸ்லி போல்ட், ஆரம்பக் காலத்தில் மளிகைக் கடை நடத்தி தனது மகனை உலகறிய செய்த உன்னத தந்தை என்பது கவனிக்கத்தக்கது. #RIP

Similar News

News April 2, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

சற்றுமுன் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. க்யூஷு தீவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. நான்கு தினங்களுக்கு முன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3000 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து உலகம் இன்னும் மீள்வதற்கு முன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News April 2, 2025

BREAKING: குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ஆர்சிபி நிர்ணயித்துள்ளது. பெங்களூரில் நடக்கும் இப்போட்டியில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரர் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மற்ற வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லிவிங் ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.

News April 2, 2025

உடம்பு சொல்றத கேளுங்க…

image

தன்னைத் தானே பழுதுநீக்கி சரிசெய்து கொள்ளும் அற்புதத் திறன் கொண்டது நமது உடல். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும், <<15972009>>குறிப்பிட்ட நேரத்தில்<<>> தன்னை தானே சரிசெய்து கொள்கின்றன. அதை புரிந்து நடந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இந்த இயற்கை சுழற்சியில் உடலின் நச்சுகள் நீக்கப்படுகின்றன, ஜீரணம் மேம்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி வலிமை பெறுகிறது. ஆகவே உங்கள் தினசரி பழக்கங்களை இந்த நேரங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!