News April 16, 2025
இந்தியா வருவதை உறுதி செய்த USA துணை அதிபர்

USA துணை அதிபர் ஜேடி வான்ஸ், வரும் 18 முதல் 24-ம் தேதிகளில் இந்தியா மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இருநாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜேடி வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 25, 2025
அதிக வசூலை குவித்த தனுஷ் படங்கள்

தனுஷ் நடித்த ஏராளமான படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. புதுப்பேட்டையில் தொடங்கி இட்லி கடை, அனைத்து படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பு மூலம் மிரட்டி உள்ளார். அவர் நடித்ததில், அதிக வசூலை குவித்த படங்கள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 24, 2025
செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைகிறாரா?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நவ.27 அல்லது நவ.28 ஆகிய தேதிகளில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இணைப்பு முயற்சியை முன்னெடுப்பேன் என தொடர்ச்சியாக கூறி வந்த செங்கோட்டையன், தற்போது தவெகவில் இணைவதாக தகவல் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 24, 2025
சூப்பர்ஹீரோ ஆகிறார் அர்ஜுன் தாஸ்!

வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்த அர்ஜுன் தாஸ், அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் அடுத்த படத்திற்கு ‘சூப்பர்ஹீரோ’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் வேணுகோபால் இயக்கும் இப்படத்தில் தேஜு அஷ்வினி, சாண்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழு வெளியிட்டுள்ளது.


