News April 24, 2025
இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்த USA துணை அதிபர்

USA துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். ஜெய்ப்பூர் அரண்மனையை நேற்று அவர் பார்வையிட இருந்தது. ஆனால் திடீரென அதை ரத்து செய்து விட்டார். அத்துடன் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு குடும்பத்தினருடன் USA -க்கு வான்ஸ் இன்று புறப்பட்டுச் சென்றார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அவர் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News December 9, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $2.78 குறைந்து $4,195.03-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.29 டாலர் உயர்ந்து $58.11 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,320-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 9, 2025
காங். ஒன்றும் காளான் அல்ல: செல்வப்பெருந்தகை

காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும் என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்., ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல, 140 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்றார். கொல்லைப்புறமாக சென்று பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
News December 9, 2025
திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.


