News November 19, 2024
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் USA: ரஷ்யா கண்டனம்

தொலைதூர ஏவுகணைகளுக்கு அமெரிக்கா அனுமதியளித்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு தொலைதூர ஏவுகணைகளை அளித்து அதனை ரஷ்யா மீது ஏவ அனுமதியும் அளித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் பைடன். இதனால், சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிக்கும் என்று ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News March 31, 2026
தொடர்கதையாகும் கூட்ட நெரிசல் மரணங்கள்!

<<19522596>>பிஹாரில் <<>>இன்று கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்த சம்பவம், இந்தியாவில் நெரிசல் மரண துயரத்துக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்துகிறது. கடந்த ஆண்டில் RCB, கரூர் கூட்ட நெரிசல் என பல உயிர்கள் இங்கு மரணித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இப்பிரச்னைக்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. ஏன் இந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது என நினைக்கிறீங்க?
News March 31, 2026
FLASH: அதிமுகவில் இணைந்த திமுக முக்கிய தலைவர்

OPS வருகைக்கு பிறகு தேனி மாவட்ட திமுகவில் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, பூத் பணிகளில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்தும் குறைந்துள்ளதாம். இதனால் அதிருப்தியடைந்த, ஒருங்கிணைந்த EX தேனி மாவட்ட செயலாளரும், திமுக தீர்மானக் குழு இணைச் செயலருமான ஜெயக்குமார் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இந்த விவகாரம் திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
News March 31, 2026
ஜெயலலிதாவின் ஹைதராபாத் இல்லம் முடக்கம்

₹80 லட்சம் வரி பாக்கி புகாரில் ஜெ.,வின் ஹைதராபாத் இல்லத்தை மாநகராட்சி நிர்வாகம் முடக்கியுள்ளது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகளுடன் உள்ள இல்லத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்து வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜெ.,வின் உறவினர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, அந்த இல்லத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


