News October 1, 2025
USA அமைச்சர் பதிலடி வேண்டாம் என்றார்: ப.சிதம்பரம்

பயங்கரவாதத்துக்கு எதிராக காங்., அரசு மென்மையாக நடந்துகொண்டது என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அப்போதைய USA வெளியுறவு அமைச்சர் பாக்.,க்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என தெரிவித்ததாக கூறினார். மேலும், அரசின் பலம், பலவீனத்தால் பதிலடி கொடுக்க முடிவெடுக்கவில்லை என்றார்.
Similar News
News October 2, 2025
இட்லி மாவை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்?

ஒரு வாரத்திற்கு தேவையான மாவை ஆட்டி ஃபிரிட்ஜில் வைக்குறீங்களா? இப்படி செய்வதால் உடலுக்கு பல பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மாவை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்களுக்கு வைத்தால் அதிகம் புளித்துபோகும் எனவும் இதனால் வாயு தொல்லை, வயிற்று தொந்தரவுகள், நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்கின்றனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 2, 2025
இன்று காலையிலேயே பள்ளிக்கு கிளம்புங்க

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள் காலையிலேயே பள்ளிகளுக்கு சென்று தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
விஜய்யை ரொம்ப விமர்சனம் பண்ணியாச்சு: செல்லூர் ராஜூ

விஜய் அரசியலில் புதுமுகம்; அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தவெக கூட்டத்தை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை; விஜய்யும் காலதாமதம் பண்ணியிருக்கக் கூடாது எனக் கூறிய அவர், இனி விஜய் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மக்களை சந்திக்காமல் தொகுதி வாரியாக சென்று சந்திக்கலாம் அல்லது பொதுவான ஒரு திடலில் கூட்டம் போடலாம் என்றார்.